News March 20, 2024
இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் திட்டம்

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம் மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika
Similar News
News November 3, 2025
தேனி: ரூ.10,000 அபராதம் விதித்த வனத்துறை

கம்பமெட்டு சோதனை சாவடியில் வனத்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த கேரளா எண் கொண்ட காரை சோதனை செய்த போது காரின் டிக்கியில் கம்பமெட்டு வனப்பகுதியில் கொட்டுவதற்காக ரெக்சின் கழிவுகளை எடுத்து வந்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து காரின் உரிமையாளர் சோலைராஜாவிற்கு வனத்துறையினர் ரூ.10,000 அபராதம் விதித்து அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
News November 3, 2025
இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சீத்சிங் தலைமையில் காலை 10.30 மணிக்கு மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள். அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். பொதுமக்கள் தங்கள் குறைகளை மனு மூலமாகவோ அல்லது நேரிலோ தெரிவிக்கலாம் என ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
News November 3, 2025
தேனியில் ரூ.6 லட்சம் வரை மானியம் பெறலாம்

தேனி மாவட்டத்தை சேர்ந்த வேளாண், தோட்டக்கலை பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்கள், உழவர் நல சேவை மையங்கள் துவக்க வேளாண் வணிகத்துறைக்கு விண்ணப்பிக்கலாம். இதில் ரூல்10 லட்சம் திட்ட மதிப்பீடு என்றால் ரூ.3 லட்சமும், ரூ.20 லட்சம் மதிப்பீடு என்றால் ரூ.6 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் வட்டார உதவி இயக்குநர்களை சந்தித்து விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்.


