News November 6, 2024
நாமக்கல்: அப்ரண்டீஸ் பயிற்சிக்கு சேர்க்கை

தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டம் மூலம் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக நாமக்கல் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம் நாமக்கல்லில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வளாகத்தில் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. கூடுதல் தகவல்களுக்கு தொலைபேசி 04286 290297, 79041 11101, 9499055842 என தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 10, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 10) இரவு நேர ரோந்து பணிகளுக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர காலங்களில் பொதுமக்கள் தங்களது உட்கோட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் 100 என்ற எண்ணையும் அழைக்கலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News September 10, 2025
நாமக்கல் இரயில் பயணிகளுக்கு அறிவிப்பு!

நாமக்கலில் இருந்து நாளை (செப்.11) நள்ளிரவு 1:20 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகப்பட்டினம்(துவ்வாடா), புவனேஸ்வர், கரக்பூர், கல்கத்தா(அண்டோல்), துர்காபூர், அசன்சோல், ஜசிதிஹ், பரூனி போன்ற பகுதிகளுக்கு செல்ல 06059 மதுரை – பரவ்னி AC ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளது.
News September 10, 2025
நாமக்கல்: நாய்களுக்கு உரிமம் பெறாமல் இருந்தால் அபராதம்!

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்களை வளர்ப்பவர்கள், அதற்கான உரிமத்தை மாநகராட்சியில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என ஆணையாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார். வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழையும் இணைத்து, உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். உரிமம் பெறாமல், நாய்களை தெருவில் திரியவிடும் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.