News March 20, 2024

‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும்; இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24; விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள்; தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே; விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika.

Similar News

News September 25, 2025

விஜயகாந்த் நினைவிடத்தில் ஆசி பெற்ற எம்.எஸ்.பாஸ்கர்

image

டெல்லியில் 71-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. இதில் ‘பார்க்கிங்’ படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து எம்.எஸ்.பாஸ்கர் பெற்றார். அவ்விருதை விஜயகாந்த் சமாதியில் வைத்து பாஸ்கர் ஆசி பெற்றார். இக்காட்சிகள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News September 25, 2025

தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்து

image

ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி நாளை முதல் வரும் 30-ந் தேதி வரை 3,225 சிறப்பு பஸ்கள் உள்பட 11,593 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 4,253 சிறப்பு பஸ்கள் உள்பட 10,529 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதாவது, 9,963 சிறப்பு பஸ்கள் உட்பட மொத்தம் 24,607 பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.

News September 25, 2025

சென்னை வந்தார் தெலுங்கானா முதல்வர்

image

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சென்னை வந்தார். சென்னை வந்த ரேவந்த் ரெட்டியை விமான நிலையத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

error: Content is protected !!