News March 20, 2024
இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள்: இன்றே கடைசி நாள்

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika
Similar News
News November 14, 2025
தொண்டி அருகே டியூசன் சென்ற சிறுமிகளிடம் அத்துமீறல்

தொண்டி அப்துல்மஜீத் 57. இவருடைய மருமகள் வீட்டில் டியூசன் நடத்தி வந்தார். அப்பகுதியை சேர்ந்த 9, 7 வயதுள்ள சகோதரிகளான இரு சிறுமிகள் டியூசன் படித்தனர். மருமகள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அப்துல்மஜித் சிறுமிகளை சில்மிஷம் செய்தார். சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதை அறிந்த அப்துல்மஜித்வெளிநாட்டிற்கு சென்று விட்டார். திருவாடானை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்தனர்.
News November 13, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் (நவ.13) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News November 13, 2025
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – இயக்குநர் ஆய்வு

ராமநாதபுரம், ராமேஸ்வரம் நகரில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி நிலைய இயக்குநரும், ராமநாதபுரம் மாவட்ட வெள்ள நிவாரணப் பணி கணிப்பாய்வு அலுவலருமான சரவணன் இன்று ஆய்வு செய்தார். கோட்டப் பொறியாளர்கள் முருகன் (கட்டுமானம் & பராமரிப்பு) பிரசன்ன வெங்கடேசன் (தரக்கட்டுப்பாடு) நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


