News March 20, 2024
திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு!

மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கனிமொழி தலைமையிலான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களின் தேவைகளை கேட்டறிந்தனர். இதையடுத்து, முழுமையாக தயாரான தேர்தல் அறிக்கை கனிமொழி தலைமையில் இன்று வெளியிடப்படுகிறது.
Similar News
News November 19, 2025
அரியலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.18) இரவு 10 மணி முதல், இன்று(நவ.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள், இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News November 19, 2025
ராகுலுடன் விஜய் பேசியது உண்மை: கார்த்தி சிதம்பரம்

ராகுலுடன் விஜய் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவலுக்கு தவெக தரப்பில் மறுக்கப்பட்டது. இந்நிலையில், விஜய் – ராகுல் பேசியது உண்மைதான் என்று காங்., MP கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். விஜய்க்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும். ஆனால், வாக்குகள் வெற்றியாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் விஜய் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் கூறியுள்ளார்.
News November 19, 2025
சேலம் மாநகரில் இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாநகராட்சியில் (18.11.2025)-தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.


