News November 6, 2024
தாண்டிக்குடி மலைப்பகுதியில் நுாதனமாக திருடப்படும் ‘அவகடா’

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ‘அவகடா’ துவக்கத்தில் காபிக்கு மத்தியில் ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டது. இவற்றின் தேவை ஆண்டுதோறும் அதிகரிக்க விலையும் அதிகரித்து வருகிறது. நடப்பாண்டில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் விளைச்சல் வெகுவாக பாதித்தால் துவக்கத்திலே கிலோ ரூ.200 விற்றது. தற்போது ரூ.300 வரை விலை போகிறது. இதனால் மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் அவகடா மரங்களில் உள்ள காய்களை நுாதனமாக திருடுகின்றனர்.
Similar News
News August 15, 2025
திண்டுக்கல் கூட்டுறவு வங்கியில் நகைக் கடன்

திண்டுக்கல் மக்களே.., நகைக் கடனிற்காக அடகு கடைகளை தேடுகிறீர்களா? நமது அரசு கூட்டுறவு வங்கியிலேயே நகைக்கு குறைந்த வட்டி விகீதத்தில் ரூ.30 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும், உங்கள் நகை மதிப்பீட்டில் 75% வரை கடன் வழங்கப்படும். எளிதில் செலுத்தும் தவணை முறைகளும் உண்டு. இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்ள <
News August 15, 2025
திண்டுக்கல்: வைகை எக்ஸ்பிரஸிற்கு பிறந்த நாள்

திண்டுக்கல்: வைகை எக்ஸ்பிரஸ் 1977ஆம் ஆண்டு ஆக.15ஆம் தேதி அன்று மெட்டர்-கேஜ் ரயிலாக மதுரை– சென்னை இடையே அறிமுகமானது. இது, அந்த காலத்தில் மணிக்கு 105 கிமீ வேகத்தில் ஓடிய அதிவேக மெட்டர்-கேஜ் ரயில். பின்னர் 1999-ல் அகல பாதைக்கு மாற்றப்பட்டு, 2014-ல் மின்சார என்ஜினால் இயக்கத் தொடங்கியது. இந்த ரயிலில் போன அனுபவங்களை கீழே COMMENT பண்ணுங்க!
News August 15, 2025
திண்டுக்கல்: பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலை

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் திடீர் நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் செல்லப்பாண்டி(40). இவர், நேற்று(ஆக.14) தனது மகள் ஸ்ரீமதி, மகன் லோகேஷ் ஆகியோருக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு பின்னர் அவரும் குடித்தார். லோகேஷ் பாலின் சுவை வேறுபாடாக இருந்ததால் குடிக்காமல் வைத்து விட்டார். சிறிது நேரத்தில் செல்லப்பாண்டி இறந்தார். அதனை குடித்த ஸ்ரீமதி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.