News March 20, 2024
இன்று முதல் வேட்புமனு தாக்கல்

நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்க உள்ள நிலையில் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வேட்புமனு பெறும் நிலையில் ஆட்சியர் அலுவலக நுழைவுப் பகுதியில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு எல்லைக்கோடு இடப்பட்டுள்ளன. எல்லைக்கோட்டை தாண்டி வேட்பாளருடன் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News April 4, 2025
தமிழில் பெயர்ப்பலகை: ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் உணவு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும். மே 15-க்குள் தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் தமிழ்ப் பெயர்ப்பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு அறிவிப்பு வழங்கி அபராதம் விதிக்கப்படும். அபராதத்தைத் தவிர்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News April 4, 2025
திண்டுக்கல்லுக்கு மீண்டும் மழை எச்சரிக்கை

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(ஏப்.4) பல்வேறு பகுதியில் கனமழைக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். உங்க உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 3, 2025
குழந்தை வரம் தரும் கோட்டை மாரியம்மன்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சக்தி வாய்ந்த கோயில்களில் ஒன்று கோட்டை மாரியம்மன் கோயில். 8 கைகள் கொண்டு காட்சி தரும் இந்த மாரியம்மனை மனதார வேண்டினால் திருமணம் ஆகாதவர்களுக்கு தாளி பாக்கியம், ஆனவர்களுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பேகம்பூரில் உள்ளது இந்த கோட்டை மாரியம்மன் கோயில். குழந்தை வரம் வேண்டும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!