News November 5, 2024
புதுக்கோட்டையில் மாநில விருது விண்ணப்பிக்க அழைப்பு

புதுக்கோட்டையில் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண் பெண் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த உடல் கல்வி இயக்குனர், ஆசிரியர்களுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கங்கள் ஆகியவை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
Similar News
News November 8, 2025
புதுகை: 12th போதும்.. வங்கி வேலை!

புதுகை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள்<
News November 8, 2025
புதுகை: பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து

புதுக்கோட்டை மச்சுவாடி சாலையில் ரேவதி (49) என்பவர் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்புறம் அரசு பேருந்து ஓட்டி வந்த பேருந்து ஓட்டுனர் சிவா (32) மோதியதில் ரேவதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரில் கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
News November 8, 2025
புதுகை: மயங்கி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழப்பு!

விராலிமலை கார்கில் நகரைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரமேஷ்(36). இவர் கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.


