News March 19, 2024
தேர்தலில் போட்டியிட அனுமதி தாருங்கள்

தேர்தலில் போட்டியிட அனுமதிக்குமாறு, தேர்தல் ஆணையத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ராஜஸ்தான் அரசு மருத்துவர் ஒருவர், நீதிமன்ற அனுமதியுடன் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டதை சுட்டிக்காட்டிய கூட்டமைப்பு, வெற்றி பெற்றால் பணியை ராஜினாமா செய்யலாம். தோல்வி அடைந்தால் மீண்டும் பணியில் சேரலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
Similar News
News November 18, 2025
டெல்லி குண்டுவெடிப்பு: 2,000 பேரிடம் விசாரணை

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், ஃபரிதாபாத்தில் 2,000-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளது. குறிப்பாக, அப்பகுதியில் தங்கியிருக்கும் காஷ்மீர் மாணவர்களை விசாரித்த போலீஸ், பயங்கரவாத தாக்குதலுக்கான காரணிகளை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறது. முன்னதாக, அல்-ஃபலாஹ் பல்கலைக்கழகத்திலும் ஃபரீதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை செய்தனர்.

சவுதி விபத்து பெரும் வேதனை அளிக்கிறது: PM மோடி

சவுதியில் இந்தியாவை சேர்ந்த யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி<<18308684>> 42 பேர் உயிரிழந்ததற்கு<<>> PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மெதினாவில் நடைபெற்ற விபத்து பெரும் வேதனை அளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் கூறியுள்ளார். நமது அதிகாரிகள் சவுதி தூதரகத்தினருடன் பேசி தேவைப்பட்ட உதவிகளை செய்ய கேட்டுக்கொண்டுள்ளதாகவும் PM மோடி குறிப்பிட்டுள்ளார்.