News November 4, 2024

மதுரை: 2 வயது சிறுமியின் உடலை தோண்டி எடுத்து விசாரணை

image

அலங்காநல்லூர் அருகே அழகாபுரியை சேர்ந்த பிரசாத்- சிவரஞ்சனி தம்பதியின் 2 வயது மகள் சுபாஷினி வீட்டின் அருகே தோட்டத்தில் கொண்டிருந்த போது அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது. உடனே அருகில் குழந்தையின் உடலை புதைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை, வருவாய் துறையினர் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 21, 2025

மதுரையில் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 அன்று காலை 10:00 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். ஆர்வமுள்ள்ளவர்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> தங்களது சுயவிவரங்களை பதிவு செய்துகொள்வதோடு, இவ்வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம். SHARE IT

News August 21, 2025

மதுரையில் ஆகஸ்ட் 22 வேலைவாய்ப்பு முகாம்

image

மதுரை மாவட்டம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆகஸ்ட் 22 காலை 10:00 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். வெளிநாடுகளுக்கும் வேலை தரும் நிறுவனங்களுக்கும் தங்கள் சுய விவரங்களை WWW.TNPRIVATEJOBS.TN.GOV.IN என்ற இணைய முகவரியில் பதிவேற்றம் செய்யலாம்.

News August 20, 2025

BREAKING: மதுரை வந்தடைந்தார் விஜய்!

image

மதுரை பாரப்பத்தியில் நாளை நடைபெறும் தவெக வின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தவெக தலைவர் விஜய் மதுரை வந்தடைந்தார். காரின் மூலம் சாலை மார்கமாக புறப்பட்டு மதுரை சிந்தாமணியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு சென்றடைந்தார். தவெக தலைவர் விஜய் இரவு தனியார் ஹோட்டலில் தங்கி நாளை தவெக மாநாட்டில் கலந்து கொள்கிறார் .

error: Content is protected !!