News March 19, 2024
திரில்லர் படத்தில் நடிக்கும் பரத்

பரத் நடிக்கும் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A Time In Madras) திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிரசாத் முருகன் இயக்கும் இந்தப் படத்திற்கு, ஜோஸ் ஃப்ராங்க்ளின் இசையமைத்துள்ளார். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர் மற்றும் பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். ஹைப்பர் லூப் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.
Similar News
News September 8, 2025
BREAKING: ஏர்போர்ட் மூர்த்தி கைது

புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் <<17628674>>ஏர்போர்ட் மூர்த்தி<<>> சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று டிஜிபி அலுவலக வாசலில் நின்ற அவரை விசிகவினர் சிலர் செருப்பால் தாக்கியது அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. அப்போது, ஏர்போர்ட் மூர்த்தியும் விசிகவினரை கத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, விசிகவினர் அளித்த புகாரின்பேரில் ஏர்போர்ட் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News September 8, 2025
உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதிபெற்றது

ஆசியக் கோப்பையை வென்றதன் மூலம் இந்திய அணி உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றது. தொடர்ந்து சிறந்த திறமையை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி, இன்று நடந்த பைனலில் கடந்த முறை சாம்பியனும் வலிமையான அணியுமான தெ.கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் 2026-ல் நடைபெறும் FIH ஹாக்கி உலகக் கோப்பை 2026-க்கு நேரடியாக தகுதிபெற்றது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.
News September 8, 2025
ராசி பலன்கள் (08.09.2025)

➤ மேஷம் – கவலை ➤ ரிஷபம் – வரவு ➤ மிதுனம் – தாமதம் ➤ கடகம் – செலவு ➤ சிம்மம் – ஆதரவு ➤ கன்னி – அசதி ➤ துலாம் – வெற்றி ➤ விருச்சிகம் – வருத்தம் ➤ தனுசு – நன்மை ➤ மகரம் – அமைதி ➤ கும்பம் – செலவு ➤ மீனம் – பயம்.