News March 19, 2024

மனு அளிக்க மாற்று ஏற்பாடு செய்த கோவை மாநகராட்சி 

image

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கோவையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.19) பொதுமக்கள் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் மனுக்களை போட்டு செல்லலாம். பின்னர் அந்த மனுக்கள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வர் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News August 8, 2025

கோவையில் இலவச தையல் பயிற்சி! APPLY NOW

image

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் தையல் நுட்பங்கள், தையல் இயந்திரத்தின் செயல்பாடு உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படும். இதற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க <>இந்த லிங்கை க்ளிக் <<>>செய்யவும். மேலும் விபரங்களுக்கு 9840129459 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 8, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (07.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 7, 2025

கோவையில் 5 முகம், 8 கரங்கள் கொண்ட முருகன்!

image

கோவை: அன்னூர் அருகே இரும்பொறையிலிருந்து 4 கி.மீ தொலைவில் ஓதிமலை முருகன் கோயில் உள்ளது. இக்கோயில் பழநி மலையை விடவும் பழமையானதாகும். ஓதிமலை முருகன் 5 தலையுடனும் 8 கைகளுடனும் காட்சி தருகிறார். பொதுவாக, அனைத்துக் கோயில்களிலும் மூலவர் சிலை பீடத்தின் மீதே நிறுவப்பட்டிருக்கும். ஆனால், இக்கோயில் மூலவர் முருகன் சிலை பாறையின் மீது நிறுவப்பட்டிருருப்பது விசேஷம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள இதை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!