News November 4, 2024

திருச்சி: மக்களிடமிருந்து குவிந்த 384 மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, ஜாதி சான்றுகள், முதியோர் உதவித்தொகை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட உதவிகள் என பொதுமக்களிடமிருந்து மொத்தம் 384 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

Similar News

News August 13, 2025

திருச்சி: மத்திய அரசு வேலை; EXAM கிடையாது!

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில், பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பபடவுள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News August 13, 2025

திருவெறும்பூர்: ஐடிஐ சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு

image

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகுதியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலி இடங்களுக்கான நேரடி சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 12, 2025

திருச்சியில் இபிஎஸ் பிரச்சாரம் அறிவிப்பு

image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புரட்சித்தமிழரின் எழுச்சி பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருச்சியில் வரும் 23 முதல் 25 மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். , 23ஆம் தேதி திருச்சி கிழக்கு திருவெறும்பூர், லால்குடி, 24 ஆம் தேதி முசிறி, மணச்சநல்லூர், துறையூர், 25ஆம் தேதி மணப்பாறை, ஸ்ரீரங்கம் மேற்கு தொகுதிக்கு வருகை புரிகிறார்.

error: Content is protected !!