News November 4, 2024

புதுகை: மக்கள் தொடர்பு முகாம் ஆட்சியர் அறிவிப்பு 

image

அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் வட்டம் மற்றும் சரகம், புண்ணியவயல் வருவாய் கிராமத்தில் எதிர்வரும் 13ம் தேதி புதன்கிழமை காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு 05.11.2024 அன்று முதல் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் புண்ணியவயல் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெறவுள்ளதால் பொதுமக்கள் மனுக்களை வழங்குமாறு ஆட்சியர் கேட்டு கொண்டுள்ளார்.

Similar News

News November 8, 2025

புதுகை: பாலியல் தொல்லை அளித்தவருக்கு ஆயுள் தண்டனை

image

திருமயம் தாலுகாவைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(39). இவர் 2023 இல் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரில் திருமயம் மகளிர் போலீஸார் போக்சோவில் சின்னச்சாமியை கைது செய்தனர். வழக்கை விசாரித்த புதுகை மகளிர் கோர்ட் நீதிபதி கனகராஜ் சின்னச்சாமிக்கு ஆயுள் தண்டனையும் ரூ 21ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

News November 8, 2025

புதுகை: 12th போதும்.. வங்கி வேலை!

image

புதுகை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள்<> இங்கு கிளிக்<<>> செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News November 8, 2025

புதுகை: பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து

image

புதுக்கோட்டை மச்சுவாடி சாலையில் ரேவதி (49) என்பவர் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்புறம் அரசு பேருந்து ஓட்டி வந்த பேருந்து ஓட்டுனர் சிவா (32) மோதியதில் ரேவதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரில் கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

error: Content is protected !!