News March 19, 2024
டெல்லியில் விருது பெற்ற மதுரை போக்குவரத்து கழகம்

சாலைப் போக்குவரத்து நிறுவனம், டெல்லி மூலம் 2022-2023 ஆம் ஆண்டிற்கான எரிபொருள் திறன் மற்றும் 5 ரன்னர் அப் விருதுகளையும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரைக்கு வழங்கப்பட்டது. தமிழக போக்குவரத்து கழக மதுரை கோட்ட நிர்வாக இயக்குநர் ஆறுமுகம் டெல்லியில் சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் சாலைப்போக்குவரத்து & தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகச் செயலாளர் அனுராக் ஜெயினிடமிருந்து விருதினை பெற்றார்.
Similar News
News November 3, 2025
மதுரை : B.E போதும் வேலை ரெடி!

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 70
3. சம்பளம்: ரூ.40,000-2,20,000
4. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
5. வயது வரம்பு: 18-45
6.கடைசி தேதி: 16.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பி<
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 3, 2025
மதுரையில் குண்டாசில் வாலிபர் கைது

மதுரை கோ. புதூர் அண்ணா நகரை சேர்ந்த பாப்பையா (30) இவர் வழிப்பறி செய்யும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இது தொடர்பான வழக்குகளில் கைதான இவர் ஜாமினில் வெளியே வந்துள்ளார். இவரை போலீசார் கண்காணித்தனர் அப்போதும் அவர் குற்ற செயல்களை தொடர்வது உறுதியானது. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். போலீசார் பாப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News November 3, 2025
மதுரையில் பூக்களின் விலை கடும் உயர்வு

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன, கடந்த சில நாட்களாக பூக்களின் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து காணப்படுகிறது, மல்லிகை ரூபாய் 800 முதல் 1000 வரை, பிச்சி கிலோ ரூபாய் 500 முதல் 600, செவ்வந்தி கிலோ 150 முதல் 200, முல்லை ரூபாய் 600 முதல் 700 வரை, கனகாம்பரம் 1000 முதல் 1200 வரை விற்பனையாகி வருகிறது.


