News November 4, 2024

திண்டுக்கல்: கட்டில் உடைந்து தந்தை, மகன் உயிரிழப்பு 

image

திண்டுக்கல்: சாணார்பட்டியில் இன்று இரும்பு கட்டில் ஒரு பக்கமாக உடைந்ததில், கழுத்து நெரித்து தந்தை கோபி கண்ணன்(35), அவரது 10 வயது மகன் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். போல்ட்டுகள் சரியாக இல்லாததால் கட்டிலின் ஒரு பக்க கால் பகுதி உடைந்துள்ளது. இதில் கட்டிலில் படுத்திருந்த தந்தை, மகன் கழுத்தை இரும்பு கம்பி நெரித்ததால் உயிரிழந்தனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News August 15, 2025

திண்டுக்கல்: வைகை எக்ஸ்பிரஸிற்கு பிறந்த நாள்

image

திண்டுக்கல்: வைகை எக்ஸ்பிரஸ் 1977ஆம் ஆண்டு ஆக.15ஆம் தேதி அன்று மெட்டர்-கேஜ் ரயிலாக மதுரை– சென்னை இடையே அறிமுகமானது. இது, அந்த காலத்தில் மணிக்கு 105 கிமீ வேகத்தில் ஓடிய அதிவேக மெட்டர்-கேஜ் ரயில். பின்னர் 1999-ல் அகல பாதைக்கு மாற்றப்பட்டு, 2014-ல் மின்சார என்ஜினால் இயக்கத் தொடங்கியது. இந்த ரயிலில் போன அனுபவங்களை கீழே COMMENT பண்ணுங்க!

News August 15, 2025

திண்டுக்கல்: பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலை

image

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் திடீர் நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் செல்லப்பாண்டி(40). இவர், நேற்று(ஆக.14) தனது மகள் ஸ்ரீமதி, மகன் லோகேஷ் ஆகியோருக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு பின்னர் அவரும் குடித்தார். லோகேஷ் பாலின் சுவை வேறுபாடாக இருந்ததால் குடிக்காமல் வைத்து விட்டார். சிறிது நேரத்தில் செல்லப்பாண்டி இறந்தார். அதனை குடித்த ஸ்ரீமதி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News August 15, 2025

திண்டுக்கல் வங்கியில் சம்பளத்துடன் பயிற்சி! CLICK NOW

image

திண்டுக்கல் மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்..? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 20.08.2025. உடனே SHARE பண்ணுங்க!

error: Content is protected !!