News March 19, 2024

கண்காணிப்பு பணியில் பொதுமக்களும் பங்கு பெறலாம்

image

தேர்தல் கண்காணிப்பு பணியில் பொதுமக்களும் பங்கு பெறலாம் ஓட்டுக்கு பணம் தருதல், சட்டவிரோத போஸ்டர் ஒட்டுதல் போன்ற அனைத்து விதமான தேர்தல் விதிமீறல் புகார்களை, நேரடியாக தெரிவிக்கலாம். மேலும் இது தொடர்பான புகைப்பட, வீடியோ ஆதாரங்களை “சி விஜில்” ( https://play.google.com/store/apps/details?id=in.nic.eci.cvigil ) என்ற செயலியில் அனுப்பலாம் எல்லாம் மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Similar News

News February 6, 2026

​ஜவுளித் துறை சலுகை: முதலமைச்சர் மற்றும் அமைச்சர் ஆர். காந்திக்கு நன்றி

image

(பிப்.06) ​தமிழகத்தில் ஜவுளித் தொழிலை நவீனப்படுத்த 20% முதலீட்டு மானியம் மற்றும் 6% வட்டி மானியம் அரசு அறிவித்து இருந்தது. அரசுக்கு, ஜவுளித் தொழில் கூட்டமைப்பினர் இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இத்திட்டங்கள் மூலம் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு பெருகும் என மகிழ்ச்சி தெரிவித்தனர்.

News February 6, 2026

சோளிங்கர்: கோயில் கும்பாபிஷேகத்தில் 20 சவரன் நகை திருட்டு

image

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் சோழபுரீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் உள்ள 5 பெண் பக்தர்களிடம் 20 சவரன் மதிப்புள்ள நகைகள் திருடு போய் உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குடும்பத்தினர் சோளிங்கர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் மனுவை அளித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News February 6, 2026

ராணிப்பேட்டை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <>tnuwwb<<>>.tn.gov.in என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!