News November 4, 2024

தீவன சோளம், புல்நறுக்கும் கருவிகள் பெற மானியம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாசன வசதி உள்ள விவசாயிகளின் நிலத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிட  தீவன சோளம் மற்றும் வேலிமசால் விதைகள் 100 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. பயன்பெற விரும்பும் விவசாயிகள் கால்நடை மருந்தகம், கால்நடை உதவி மருத்துவரை அணுகி ஆதார் அட்டை, பசுந்தீவனம் பயிரிடப்பட உள்ள நிலத்திற்கான சிட்டா, அடங்கல் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Similar News

News November 19, 2024

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

image

போச்சம்பள்ளி வட்டத்தில் நாளை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் பொருட்டு அனைத்து பகுதிகளிலும் மாவட்ட ஆட்சியர்  தலைமையில் அனைத்து துறை உயர் அலுவலர்களும் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு மக்களிடம் நேரடியாக சென்று கள ஆய்வு நடைபெற உள்ளது. இந்த கள ஆய்வு நாளை காலை 9 மணி முதல் அடுத்த நாள் காலை 9 மணி வரை நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News November 19, 2024

கிருஷ்ணகிரியில் 22-ந் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் கலெக்டர் சரயு தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சரயு கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 18, 2024

கிருஷ்ணகிரி அருகே சிறுத்தை நடமாட்டம்?

image

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியிலிருந்து பேரிகை செல்லும் சாலையில் புலியரசி கிராமத்தை அடுத்துள்ள செட்டிப்பள்ளி காப்புகாடு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் ஆங்காங்கே  கேமராவை பொருத்தி வருகின்றனர். இதன்மூலம் அப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என கண்டறியப்பட்டு அவற்றை பிடிக்கும் பணி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.