News March 19, 2024
புதுவை: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் புதிய கலெக்டர் அலுவலகத்தில் நாளை தொடங்கி 27ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு இடைவெளியின்றி வேட்புமனு பெறப்படுகிறது. 23ஆம் தேதி, 24ஆம் தேதி விடுமுறை நாட்களில் வேட்புமனு பெறப்படாது. இந்நிலையில், வேட்புமனு பெறும் ஏற்பாடுகளை தேர்தல் துறை தீவிரமாக செய்து வருகிறது.
Similar News
News September 7, 2025
புதுச்சேரி: 18ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது

புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம் 15 சட்டப்பேரவையின் 6 கூட்டத்தொடரின், இரண்டாவது பகுதி வரும் 18ஆம் தேதி கூட உள்ளதாகவும், இந்த கூட்டத்தொடரில் புதுச்சேரியில் வணிகம் செய்தலை எளிதாக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், மாநில அந்தஸ்து உள்ளிட்ட தனிநபர் மசோதாக்கள் கொண்டுவந்தால், அது தொடர்பாக பரிசீலனை செய்து விவாதம் நடத்தப்படும் என்றார்.
News September 7, 2025
புதுச்சேரி மாணவர்களுக்கு முக்கிய Update!

புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நடப்பு 2025-26ம் கல்வி ஆண்டில் முதுகலை பட்டப்படிப்புகளில் (எம்.டெக், எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி.,) சேர்வதற்கான முதலாம் மற்றும் இரண்டாம் கலந்தாய்வுகள் முடிந்த நிலையில், மீதமுள்ள காலி இடங்களுக்கு வரும் 9ஆம் தேதி இறுதி கட்டமாக மாப்-அப் கலந்தாய்வு நடக்கிறது. விபரங்களுக்கு www.pgacpdy.in என்ற இனையத்தில் பாராக்கவும். SHARE IT
News September 7, 2025
புதுச்சேரி: காவல் நிலையத்தில் குறை தீர்வு முகாம்

புதுச்சேரி காவல்துறை தலைவர் டிஜிபி சாலினிசிங் அறிவுறுத்தல் படி அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. அதன்படி நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் காவல் கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு குறைகளை தெரிவித்தனர் அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.