News November 4, 2024

சபாநாயகரை வரவேற்ற சிங்கப்பூர் திமுக அயலக அணி

image

ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரில் நடைபெறும் 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக செல்லும் வழியில் கீழ்த்திசை நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் சென்றடைந்த தமிழக சபாநாயகர் அப்பாவுக்கு, அங்குள்ள திமுக அயலக அணி நிர்வாகிகள் நேற்று (நவ.3) உற்சாக வரவேற்பு அளித்தனர். தமக்கு அளித்த அன்பான வரவேற்புக்கு அயலக அணி நிர்வாகிகளுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.

Similar News

News August 23, 2025

நெல்லை இளைஞர்களே.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க…

image

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் நடத்தும் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது. பாளை St. John’s கல்லூரியில் வைத்து நடைபெறவுள்ளது. 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. 2000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உள்ளன. வேலை தேடும் இளைஞர்கள் உடனே உங்கள் சுயவிபரம் (Resume), கல்விச்சான்றுகளுடன் மிஸ் செய்யாமல் கலந்து கொள்ளுங்கள். உடனே SHARE பண்ணுங்க

News August 23, 2025

நெல்லைக்கு அமைச்சர் நேரு திடீர் வருகை

image

நெல்லைக்கு நேற்று இரவு நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு வருகை தந்தார். இவரை பாளை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் தலைமையில், துணை மேயர் ராஜூ உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர். நெல்லையில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் வந்துள்ளார்.

News August 23, 2025

நெல்லை இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஆகஸ்ட்.22) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!