News March 19, 2024
கரூர்: விவசாயிகள் திரண்டதால் பரபரப்பு

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள நீர்வளத்துறை ஆற்றுப் பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு தென்கரை பாசன வாய்க்கால் மற்றும் கட்டளை மேட்டு வாய்க்கால்களில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 2 நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
Similar News
News August 8, 2025
குடற்புழு நீக்க மருந்துவ முகாம்: ஆட்சியர் அறிவிப்பு

கரூர் ஆகஸ்ட் 11ல் குடற்புழு நீக்க மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். 1 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட 2,39 லட்சம் பேர், 20 முதல் 30 வயதுக்குள் 80,627 பெண்களுக்கு குடற்புழு நீக்க மருந்து இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ, இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். ரத்தசோகை குறைபாடு வராமல் தடுக்க முடியும்.
News August 8, 2025
கரூர்: மாணவர்களுக்கு கல்விக் கடனுதவி!

தமிழ்நாடு கல்வி கடன் திட்டம் கீழ் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி, வேலை வாய்ப்பு, பட்டப் படிப்பு பயில்பவர்களுக்கு அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!
News August 7, 2025
கரூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

கரூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 52, Office assistant admin பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் இங்கே <