News March 19, 2024
திருவாரூர்: EVM இயந்திரம் உள்ள அறைகளில் கலெக்டர் ஆய்வு

மன்னார்குடி வ.உ.சி சாலையில் உள்ள இராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரியில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைகள் மற்றும் கண்காணிப்பு கேமரா அறைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சாரு ஸ்ரீ இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தேர்தல் பிரிவு அதிகாரிகள் உடனிருந்தனர்.
Similar News
News October 24, 2025
திருவாரூர்: ரயில்வேயில் சூப்பர் வேலை!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள 64 Hospitality Monitors பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: பட்டப்படிப்பு
2.சம்பளம்: ரூ.30,000/-
3.வயது வரம்பு: 18-28 (SC/ST-33, OBC-31)
4.தகுதியான நபர்கள் நேரடி நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட உள்ளனர்
5.மேலும் விபரங்களுக்கு <
உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News October 24, 2025
திருவாரூர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு திருவாரூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04366-226767) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!
News October 24, 2025
திருவாரூரில் மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்தும் கல்வி வங்கிக் கடன் முகாம் வரும் அக்டோபர் 29-ம் தேதி அன்று காலை 10 மணி அளவில் மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.


