News November 3, 2024

விராலிமலை:வாகனம் மோதி கட்டடத் தொழிலாளி பலி

image

விராலிமலையை அடுத்துள்ள கசவனூர் வடக்கிப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(59). கட்டடத் தொழிலாளி. இவர் நேற்று மாலை கொடும்பாளூர் கசவனூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து விராலிமலை போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 24, 2025

திருமயம் பெருமாள் கோவிலில் பவித்ரோத்ஸவம் விழா நிறைவு

image

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஸ்ரீ உஜ்ஜிவனவல்லி தாயார் சமேத ஸ்ரீ சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பவித்ரோத்ஸவம் விழா இன்று காலை10 மணியளவில் நிறைவடைந்தது. இதில் திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

News August 24, 2025

புதுக்கோட்டை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு புதுகை மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News August 24, 2025

புதுக்கோட்டையில் இவ்வளவு பழமையான இடங்களா?

image

புதுக்கோட்டை மாவட்டம் மிகப்பழமையான வரலாறுகளை கொண்டுள்ளது.
குடுமியான்மலை கல்வெட்டு – 2300 ஆண்டுகள் பழமை
குன்றாண்டார் கோயில் – 1200 ஆண்டுகள் பழமை
கொடும்பாளூர் மூவர் கோயில் – 1000 ஆண்டுகள்
நார்த்தாமலை, விஜயாலய சோழீஸ்வரம் – 1100 ஆண்டுகள் பழமை
திருமயம் கோட்டை – 400 ஆண்டுகள் பழமை
மலையடிப்பட்டி – 300 ஆண்டுகள் பழமை
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்

error: Content is protected !!