News March 19, 2024
சென்னையில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யபட்டுள்ளார். வெகுநேரமாக இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணவர் வெங்கடேசன், மனைவியை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளார். வெங்கடேசனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Similar News
News August 8, 2025
சென்னை மக்களுக்கு காலையிலேயே குட்-நியூஸ்

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை இனி Uber App மூலம் எளிதாக பெற முடியும். Uber App மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முழுவதும் 50% தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது. இதனால் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்க வேண்டாம். ஆகஸ்ட் மாதம் முழுவதும் பாதி விலையில் மெட்ரோவில் பயணிக்கலாம். UPI மூலம் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை QR கோடுகளாக பெறலாம். இந்த நல்ல செய்தியை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
News August 8, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

சென்னையில் இன்று (ஆக.8) திருவொற்றியூர், ஆலந்தூர், கோடம்பாக்கம், அம்பத்தூர், மாதவரம், வளசரவாக்கம் ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <
News August 8, 2025
கிளாம்பாக்கம் வரை மெட்ரோ சேவை நீட்டிக்க பரிசீலனை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் இன்று (ஆக.07) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க பரிசீலனை செய்து வருகிறோம். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என கூறினார்.