News March 19, 2024

திருச்சி அருகே உத்தரவு

image

திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்தளத்தில் மருந்தகம் வைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்காக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளின் நிலை குறித்து இன்று திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் நேரில் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News

News September 10, 2025

திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

image

திருச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (செப்.10) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புள்ளம்பாடி ஒன்றியத்திற்கு கீழரசூர் பகுதிகளிலும், தா.பேட்டை ஒன்றியத்திற்கு கரிகாலி பகுதியிலும், தொட்டியம் ஒன்றியத்திற்கு கோடியம்பாளையம் பகுதியிலும், துறையூர் ஒன்றியத்திற்கு முருகூர் பகுதியிலும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 9, 2025

திருச்சி: விவசாயிகளுக்கு மாநில அளவிலான விருது

image

திருச்சி மாவட்டத்தில் வேளாண் சாகுபடிக்கான நவீன தொழில்நுட்ப கருவிகளை கண்டுபிடித்த சிறந்த விவசாயிகளுக்கு மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தங்களது பெயரை உழவர் செயலி மூலம் பதிவு செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, பதிவு கட்டணம் ரூ.150 சேர்த்து வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்க வேண்டும் என மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News September 9, 2025

திருச்சி: பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் ரத்து

image

திருச்சி கோட்ட ரெயில்வே பகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பராமரிப்பு பணிகள் பணிகள் நடைபெறுவதால் விழுப்புரம் -மயிலாடுதுறை மெமு ரெயில் வருகிற 13, 20,27 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து 25 நிமிடம் தாமதமாக புறப்படும். மேலும் மயிலாடுதுறை-திருச்சி மெமு ரயில் வருகின்ற 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!