News November 3, 2024
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவிப்பு

சாலையின் தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டுவது விபத்துக்களுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு 2வது பெரிய காரணம் தவறாக வாகனம் ஓட்டுவது. விதிகளை மீறியதால்தான் அதிக விபத்துகள் நடக்கின்றன. போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால் அதிக அபராதம் விதிக்கப்படும் என ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் கிரண் சுருதி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
ராணிப்பேட்டை: அமெரிக்கா விதித்த வரியால் வேலை இழப்பு

அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பல தோல் தொழற்சாலைகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேல்விஷாரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் தோல் தொழிற்சாலைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.100 கோடி ஏற்றுமதி பாதிக்கும் என கூறப்படும் நிலையில் லட்சக்கணக்கானோர் வேலை இழப்பார்கள் என தொழிற்துறை வல்லுனர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். உங்க கருத்தை பதிவு செய்து ஷேர் பண்ணுங்க
News August 27, 2025
BREAKING: ராணிப்பேட்டை – 10ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே இன்று (ஆக.27) 14 வயது சிறுவன் நீரில் முழ்கி உயிரிழந்த சம்பம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் விவசாய கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 10ஆம் வகுப்பு மாணவன் ராஜேஷ் என்பவர் பரிதாமபாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News August 27, 2025
ராணிப்பேட்டை: கூட்டுறவு வேலைக்கு விண்ணபிப்பது எப்படி?

▶️ ராணிப்பேட்டை கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 45 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ▶️சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ▶️விண்ணபிக்கhttps://www.drbrpt.in/index.php இணையதளத்திற்கு செல்ல வேண்டும். ▶️பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, விண்ணப்பதாரரின் புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். (SHARE பண்ணுங்க)