News March 19, 2024
பங்குச் சந்தைகள் கடும் சரிவு

இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடுமையான சரிவினை சந்தித்திருக்கின்றன. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 238 புள்ளிகளை இழந்து 21,817 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 736 புள்ளிகளை இழந்து 72,012 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. அன்னிய நாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து வெளியேறுவதே வீழ்ச்சிக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
Similar News
News November 8, 2025
ரெய்னா, தவானுக்கு சமூக பொறுப்பு உள்ளதா?

சூதாட்ட செயலிகள் விளம்பரத்தில் நடித்ததற்காக <<18217110>>ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா<<>> சொத்துகளை நேற்று ED முடக்கியது. இதை குறிப்பிட்டு, இந்த பிரபலங்களுக்கு சமூக பொறுப்பு என்பது உண்மையில் இருக்கிறதா என ஹைதராபாத் கமிஷனர் V.C.சஜ்ஜனார் கேள்வி எழுப்பியுள்ளார். சூதாட்ட செயலிகளை புரொமோட் செய்து, பலர் தற்கொலை செய்து கொள்ள இந்த பிரபலங்களே காரணமாக உள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
News November 8, 2025
ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள்

ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள் பணியாற்றி வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது. ரஷ்யாவில் அதிக சம்பளத்தில் வேலை என அழைத்து செல்லப்படும் இந்தியர்கள், அங்கு ராணுவ உதவியாளர்களாக சேர்க்கப்படுகின்றனர்.
News November 8, 2025
வந்தே மாதரத்தை பாடாதவர்கள் கேள்வி கேட்பதா? கார்கே

வந்தே மாதரத்தை பாடாத RSS-காரர்கள், இன்று தேசியத்தின் காவலர்களாக காட்டிக் கொள்வது விந்தையாக இருப்பதாக காங்., தலைவர் கார்கே விமர்சித்துள்ளார். வந்தே மாதரம் பாடலின் முக்கிய வரிகளை நீக்கி, நாட்டு பிரிவினைக்கு காங்., வித்திட்டதாக மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு இவ்வாறு பதிலளித்துள்ள கார்கே, RSS ஷாகா, அலுவலகங்களில் தேசிய கீதமான ஜன கண மன, வந்தே மாதரம் இரண்டையும் பாடியதே இல்லை என விமர்சித்தார்.


