News March 19, 2024
புதுவை: மதுபானக் கடைகளை இரவு 10 மணிக்கு மூட உத்தரவு

புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து வகையான மதுபானக் கடைகளும், இரவு 10.00 மணிக்கு மூட வேண்டும் என புதுச்சேரி கலால்துறை சார்பில் உத்தரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறும் மதுபான கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்க்கப்பட்டுள்ளது.
Similar News
News January 15, 2026
புதுச்சேரி: கெட்ட வாரத்தை பேசிய இளைஞர் கைது

புதுவை முதலியார்பேட்டை உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே ஒருவர் மதுபோதையில் ஆபாச வார்த்தைகளால் பொதுமக்களை திட்டியுள்ளார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது, அவர் வேல்ராம்பட்டு சேர்ந்த பாரூக்(31) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
News January 14, 2026
புதுச்சேரி: பணி உயர்வை தரும் பஞ்சநதீசுவரர் கோயில்

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்சநதீசுவரர் கோயில் எனப்படும் திருவாண்டார்கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள பஞ்சநதீஸ்வரர், வடுகீஸ்வரரை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும், பணிஉயர்வு கிடைக்கும், செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் தமிழ்ப்புத்தாண்டு, சிவராத்திரி போன்ற நாட்கள் மிகவும் விசேஷமானவையாகும். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!
News January 14, 2026
புதுச்சேரி: ராணுவத்தில் வேலை – APPLY NOW

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: CLICK <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!


