News November 3, 2024
துக்க நிகழ்ச்சிக்கு சென்றபோது நேர்ந்த விபத்து

ராணிப்பேட்டை துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, உறவினர்கள் காஞ்சிபுரம் மேல்ஓட்டிவாக்கம்,கூத்திரம் மேடு பகுதியில் இருந்து மினி லாரி மூலம் சென்றுள்ளனர். அப்போது தாமல் அருகே மினி லாரியின் டயர் வெடித்ததால் லாரி கவிழ்ந்தது. இந்த மினி லாரியில் பயணம் செய்த 28 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மினி லாரியில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News August 16, 2025
காஞ்சிபுரம்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (15.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 15, 2025
காஞ்சிபுரம்: இரவு நேர ரோந்து போலீசார் விவரம்

காஞ்சிபுரம் போலீசார் இன்று (15.08.2025) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து போலீசாரின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் தனியாக செல்வோருக்கு கட்டாயம் உதவும் பகிரவும்*
News August 15, 2025
உத்திரமேரூர் பேரூராட்சிக்கு பரிசு வழங்கிய முதல்வர்

இந்திய நாட்டின் 79வது சுதந்திர தின விழாவை ஒட்டி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றி வைத்தார். பின், தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்திரமேரூர் பேரூராட்சிக்கு, முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார். இவ்விருதை பேரூராட்சித் தலைவர் சசிகுமார் பெற்றுக்கொண்டார்.