News November 3, 2024
319 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
சென்னையில் கடந்த 3 நாட்களில் 319.26 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 10வது மண்டலமான கோடம்பாக்கத்தில் 31.50 மெட்ரிக் டன் குப்பைகளும், குறைந்தபட்சமாக சோழிங்கநல்லூரில் 10.13 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகளும் அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
Similar News
News November 20, 2024
மெட்ரோ ரயில் திட்டத்தில் புதிய அறிவிப்பு
சென்னையில் சுமார் 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100% நிறைவடைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில் ‘கட்டம்-II, வழித்தடம் 4இல், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு நிலையத்திற்கு இடையே உயர்மட்ட வழித்தடத்தில் தூண்கள் அமைக்கும் பணிகளை வெற்றிகரமாக முடித்து அந்நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
News November 20, 2024
இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து!
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இன்று ஒரு நாளில் மட்டும் புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம், சிலிகுரி உள்ளிட்ட 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
News November 20, 2024
இலவச மருத்துவ முகாம்கள்: யூஸ் பண்ணிக்கோங்க
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் தினந்தோறும் மாலை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.அதேபோல், இன்றும் (நவ.20) சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. மாலை 4:30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.