News March 19, 2024
சேலம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு
தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (மார்ச் 20) தொடங்கவுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது அதிகபட்சமாக வேட்பாளர் உட்பட 5 நபர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் வர அனுமதிக்கப்படுவர். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது மேற்படி அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையத்தால் தீவிரமாக கண்காணிக்கப்படும். விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் ஆட்சியர் தெரிவித்தார்.
Similar News
News November 19, 2024
சேலம் ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு
இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை வழியாக கோவையில் இருந்து பீகார் மாநிலம் ப்ரௌனிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் (03358), இன்று (நவ.20) நள்ளிரவு 12.50 மணிக்கு பதிலாக சுமார் 5 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக, அதிகாலை 06.00 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
News November 19, 2024
ரேஷன் கடை வேலைக்கு நேர்முக தேர்வு
சேலம் கூட்டுறவுச் சங்கங்களில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் நவ.28 முதல் டிச.7 வரையும், கட்டுனர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு நவ.7 முதல் நவ.9 வரையும் நடக்கிறது. இந்த நேர்முகத் தேர்வானது, சேலம் அழகாபுரம் போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய நலக்கூடத்தில் நடக்கிறது.
News November 19, 2024
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம்
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, ஓமலூர், சங்ககிரி, மேட்டூர், எடப்பாடி, சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, வீரபாண்டி, கெங்கவல்லி, ஆத்தூர் ஆகிய 11 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 23,639 பேர் விண்ணப்பித்துள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். வாக்காளர் பெயரை நீக்க 4,935 பேரும், திருத்தம் செய்ய 13,534 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.