News March 19, 2024
மேல்பாதி கோவிலை திறக்க இன்று உத்தரவு

விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு சென்ற ஆண்டு பூட்டி சீல் வைக்கப்பட்ட நிலையில், கோவிலை திறப்பது தொடர்பாக பாமக வழக்கறிஞர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், இன்று (மார்ச் 19) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வருகின்ற மார்ச் 22 வெள்ளிக்கிழமை முதல் தினமும் கோவிலை திறந்து இரண்டு வேளை பூஜை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 8, 2025
விழுப்புரத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (ஆக.8) திண்டிவனம் நகராட்சி, கானை ஒன்றியம், விக்கிரவாண்டி ஒன்றியம், முகையூர் ஒன்றியம், மரக்காணம் ஒன்றியம் மற்றும் கோலியனூர் ஒன்றியத்தில் நடைபெற உள்ளதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். இந்த முகாமில் 15 துறைகள் சார்பாக பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 7, 2025
திருவண்ணாமலை கிரிவலத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக நாளை ஆகஸ்ட் 8 திருவண்ணாமலை ஆடி பௌர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு பேருந்துகள் விழுப்புரத்தில் இருந்து இயக்கப்பட இருக்கின்றன கிரிவலத்திற்கு செல்லும் பக்தர்கள் தமிழக போக்குவரத்துக் கழகம் செயலி வாயிலாகவோ இணையதளம் வாயிலாகவோ தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது
News August 7, 2025
கோட்டகுப்பம் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

விழுப்புரம் மாவட்டத்தில் SC, ST வன்கொடுமை சட்டம் புகார் தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என செந்தாமரை என்பவர் புகார் மனு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விசாரணை அதிகாரி DSP சுனில் என்பவரை இடைநீக்கம் செய்ய வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.