News March 19, 2024
கிருஷ்ணகிரி: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

வாடமங்கலம் கிராமத்தைச் கோவிந்தசாமி என்பவரின் மகன் சந்தோஷ்குமார் தனியார் பள்ளியில் 11-ம்வகுப்பு படித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டின் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பந்து வீட்டின் மீது விழுந்தது. பந்தை எடுக்க அங்கிருந்த குழாய் ஐ பிடித்த போது எதிர்பாரத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பாரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News October 25, 2025
கிருஷ்ணகிரி பெற்றோர்களே உஷாரா இருங்க..

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளா் ஜோதி பிரகாஷ் தலைமையில் போலீஸாா் நேற்று (அக்24) திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது மோட்டாா்சைக்கிளை ஓட்டிய சிறுவா்களை பிடித்து, அவா்களின் பெற்றோருக்கு. 25 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், வாகனத்தின் உரிமம் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படும், பெற்றோருக்கு ஓராண்டுவரை சிறைத் தண்டனையும் கிடைக்கும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை எச்சரித்துள்ளார்.
News October 25, 2025
கிருஷ்ணகிரியில் சிறப்பு கூட்டம்

கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 33 வார்டுகளிலும் வரும் 27ம் தேதி காலை 9 மணிக்கு அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் வார்டு சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள், தங்களது வார்டு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலை பழுதுகள், பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்றவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் பொதுமக்கள் கூறலாம்.
News October 25, 2025
கிருஷ்ணகிரி: லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது

வேப்பனஹள்ளி வட்டார வேளாண்மை அலுவலகத்தில், முருகேசன் என்பவர், உதவி வேளாண்மை அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மங்கம்மா என்பவருக்கு மாடு வாங்க மானியம் ரூ.32ஆயிரத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு ரூ.20ஆயிரம் கிடைத்த நிலையில் மீதமுள்ள 12ஆயிரத்தை விடுவிக்க முருகேசன் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதுகுறித்து மங்கம்மா அளித்த புகாரின் பேரில் முருகேசனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.


