News March 19, 2024
திருப்பூரில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் அதிரடி

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 64 குழுக்கள் தேர்தல் விதிமுறைகள் தொடர்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2,10,310-ஐ இன்று தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
Similar News
News October 14, 2025
திருப்பூர்: கேட்பாரற்று கிடந்த 3 கிலோ கஞ்சா

திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசார் ரயில் நிலையம் பகுதியில், போலீசார் ரோந்து பணியில் மேற்கொண்டனர். அப்போது அங்கே சந்தேகத்திற்கு இடமாக கிடந்த பையை கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அந்த பையில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மாநகர மதுவிலக்கு போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்து, கஞ்சா கடத்தி வந்தது யார் என்பதை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 13, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 13.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், பல்லடம்,அவினாசி, உடுமலை ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.
News October 13, 2025
திருப்பூரில் வட மாநில இளைஞர் குத்தி கொலை!

திருப்பூர் சிறுபூலுவபட்டி ரங்கநாதபுரம் தெய்வீக நகரில் ஹாஸ்டலில் தங்கி பணியாற்றிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் (25) மற்றும் அனில் (28) ஆகியோர் நேற்று மது அருந்திய நிலையில் பண விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அனில், ஆகாஷை கத்தியால் குத்தி கொலை செய்தார். தடுக்க முயன்ற விக்கி புரோஜா (23) என்பவரும் காயமடைந்தார். வேலம்பாளையம் போலீசார் அனில் என்பவரை கைது செய்து விசாரணை!