News March 19, 2024
திமுக கூட்டணிக்கு 3 கட்சிகள் ஆதரவு

மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக மமக உள்பட 3 கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் மற்றும் சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
Similar News
News November 18, 2025
SPORTS ROUNDUP: 2026 WPL ஜனவரி 7-ல் தொடக்கம்

*அபுதாபியில் இன்று டி10 லீக் தொடர் தொடங்குகிறது. *மகளிர் பிரீமியர் லீக் அடுத்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி தொடங்க உள்ளது. *உ.பி. எதிரான ரஞ்சி கோப்பை போட்டியில் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவிப்பு *வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ODI தொடரில் இருந்து நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் காயம் காரணமாக விலகியுள்ளார்.

தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 523
▶குறள்:
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
▶பொருள்: உற்றார் உறவினர் எனச் சூழ இருப்போருடன் அன்பு கலந்து மகிழ்ந்து பழகாதவனுடைய வாழ்க்கையானது; கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போலப் பயனற்றதாகி விடும்.