News March 19, 2024
விருதுநகர் காவல்துறையினர் நடவடிக்கை

விருதுநகரில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடத்திடும் பொருட்டு சமூக வலைதளங்கள் மூலமாக உண்மைக்கு புறமாக செய்தி வெளியிடுபவர்கள் மீது சைபர் கிரைம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா இன்று(மார்ச்.19) தெரிவித்துள்ளார். மேலும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
Similar News
News November 28, 2025
BREAKING விருதுநகரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டிட்வா புயல், சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவ.29) விடுமுறை அறிவித்து தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. SHARE IT
News November 28, 2025
BREAKING விருதுநகரையே உலுக்கிய வழக்கில் தீர்ப்பு

அருப்புக்கோட்டை அருகே 2022 இல் பாலவநத்தம் – கோபாலபுரம் சாலையில் உறவினரை தாக்கி 43 வயது பெண்னை சிறுவன் உட்பட 7 பேர் காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து செயினை பறித்து சென்ற சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியது. இதில் சிறுவன் மீதான வழக்கு இளஞ்சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் மற்ற 6 பேருக்கும் ஆயுட்கால சிறை தண்டனை விதித்து ஸ்ரீவி விரைவு மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
News November 28, 2025
விருதுநகரில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

விருதுநகர் மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு வருவாய் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்.


