News November 2, 2024
குமரியில் தீபாவளிக்கு ரூ.9.50 கோடிக்கு மது விற்பனை

தீபாவளியையொட்டி குமரி மாவட்டம் முழுவதும் உள்ள 91 டாஸ்மாக் கடைகளில் கடந்த 30, 31ம் தேதிகளில் மொத்தம் ₹9.50 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக நாள் ஒன்றுக்கு சராசரியாக ₹3 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 13, 2025
குமரியில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி

ஆலங்கோடு அருகே சரல்விளையை சார்ந்தவர் சுஜி(34).இவர் 100 நாள் வேலை பார்த்து வருகிறார். இவரிடம் மூன்று பேர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.10 லட்சம் வாங்கியுள்ளனர். பின்னர் வேலை வாங்கிக் கொடுக்காததால் அந்தப் பணத்தை சுஜி கேட்ட நிலையில் அவரை ஆபாசமாக பேசி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News August 13, 2025
குமரி: நிலம் வாங்குபவர்கள் கவனத்திற்கு

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. கன்னியாகுமரி மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<
News August 13, 2025
BREAKING: குமரி படகு போக்குவரத்து திடீர் ரத்து!

கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் படகு போக்குவரத்து நடைப்பெற்று வருகிறது. இன்று(ஆக.13) கன்னியாகுமரி கடலில் தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தற்காலிகமாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை ரத்து செய்துள்ளது. நிலைமை சீரானவுடன் பழகு போக்குவரத்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.