News November 2, 2024

அனுமதியின்றி பட்டாசு வெடித்ததாக 17 பேர் மீது வழக்கு

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த அக்.31ஆம் தேதி தீபாவளி அன்று அனுமதியின்றி பட்டாசு வெடித்ததாக, பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒலக்கூர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், வானூர், ரோஷனை, மரக்காணம் ஆகிய காவல் நிலையங்களில் தலா 2 வழக்குகளும், வளவனூர் காவல் நிலையத்தில் 5 வழக்குகள் உட்பட மொத்தம் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 18, 2025

அடையாளம் தெரியாத இறந்த நபர் கண்டுபிடிப்பு

image

ஒலக்கூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாதிரி கிராமத்தில் கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி கழுத்தை நெறிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடைக்கப்பெற்ற ஆண் பிரேதம் சம்மந்தமாக, கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அன்றைய தினமே கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தேனி மாவட்டம் எரதிமக்காள்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜோதிமணி என்பது தெரிய வந்துள்ளதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News August 18, 2025

கடலோர காவல் படையில் விண்ணப்பிக்க அழைப்பு

image

விழுப்புரம் மாவட்ட கடலோர ஊர்காவல்படையில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 15 காலி பணியிடங்களுக்கு விழுப்புரம் மாவட்ட எஸ்பியின் உத்தரவின்படி, கோட்டக்குப்பம் காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள20-45 வயது நல்ல உடல் திறன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள் ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் விழுப்புரம் ஊர்க்காவல் படையில் விண்ணப்பங்கள் பெற்று ஆயுதப்படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது

News August 17, 2025

இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ( ஆக. 17) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி எண்கள் வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!