News March 19, 2024
சிஏஏ வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சிஏஏவுக்கு தடை கோரி தாக்கலான மனுக்கள் குறித்து 3 வாரத்திற்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு, மனுக்கள் விசாரணைக்கு வந்தன. மத்திய அரசு சார்பில், பதில் அளிக்க 4 வாரகாலம் அவகாசம் கோரப்பட்டது. இதைக்கேட்ட உச்சநீதிமன்றம், 3 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Similar News
News October 31, 2025
நீண்ட ஆயுளுக்கு உதவும் இரவு குளியல்

காலை குளியல் போன்றே, இரவு குளியலும் வெறுமென உடலை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், உடலுக்கு பல்வேறு நன்மைகள் தருகிறது. தூங்குவதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன்பு குளிப்பது மிகவும் சிறந்தது. மோசமான தூக்கம் இதய நோய், மனச்சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தி ஆயுட்காலத்தை குறைக்கிறது. ஆனால், இரவு குளியல் ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுத்து, நீண்ட காலம் வாழ உதவுகிறது. மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்க.
News October 31, 2025
திமுக பிரிவினையை ஏற்படுத்துகிறது: தமிழிசை

நாட்டு மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் வேலையை திமுக செய்வதாக தமிழிசை குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹார் மக்களை திமுகவினர் கீழ்த்தரமாக பேசுவதாகவே PM மோடி குறிப்பிட்டதாகவும், அது திமுக குறித்து வைக்கப்பட்ட விமர்சனமே தவிர தமிழர்கள் மீது கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பிஹாரிகள் அறிவில்லாதவர்கள், தமிழர்களின் வேலையை பறிப்பவர்கள் என்று கே.என்.நேரு பேசியதை தமிழிசை சுட்டிக்காட்டினார்.
News October 31, 2025
காதல் கைகூட செய்ய வேண்டிய வழிபாடு!

நம் வாழ்வின் தேவைகளை கடவுளிடம் வேண்டிப் பெறுவது போலக் காதலையும் வேண்டிப்பெறலாம். காதல் கைகூட காதற் கடவுளர்களான ரதி – மன்மதனை வணங்க வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் திண்டுக்கல், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் உள்ள மன்மதனின் சிலைக்கு பெண்களும், ரதியின் சிலைக்கு ஆண்களும் அபிஷேகம் செய்து வழிபட, காதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.


