News November 1, 2024
தூத்துக்குடி ரோந்து போலீசார் விவரம்

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் (நவ01) இன்று இரவு நேர ரோந்து பணிகளுக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் இதில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினரின் எண்களை தொடர்பு கொள்ளலாம். அல்லது அவசரகால எண் 100 மற்றும் மாவட்ட ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்ணைகளை தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 12, 2025
திருச்செந்தூர் கோவிலை உறுதிமொழி குழுவினர்ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் குழு உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் (சேலம் மேற்கு), மாங்குடி (காரைக்குடி), எம்.கே.மோகன் (அண்ணா நகர்) ஆகியோர் இன்று 12.9.25 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பாடசாலையை பார்வையிட்டு கள ஆய்வு நடத்தினர்.
News September 12, 2025
தூத்துக்குடி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தூத்துக்குடி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிஞ்சுக்கோங்க. 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000479, 9445000481, 9445000480 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News September 12, 2025
தூத்துக்குடியில் குற்றாவளி ஆஜராக நீதிமன்றம் கெடு

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆபிரகாம் என்பவர் மீது ஒரு வழக்கு விசாரணை உள்ளது. இந்த விசாரணைக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் தூத்துக்குடி நீதிமன்றம் வரும் 15ம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை என்றால் அவர் தலைமறைவு குற்றவாளி என தீர்ப்பு விதிக்கப்படும் என நீதிபதி தாண்டவன் எச்சரிக்கை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.