News March 19, 2024
ரூ.200 கோடி வசூலித்த மஞ்சும்மெல் பாய்ஸ்

உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து, அதிக வசூல் செய்த முதல் மலையாள படம் எனும் வரலாற்று சாதனையை மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் படைத்துள்ளது. கடந்த மாதம் வெளியான அந்தப் படம், 12 நாள்களில் ரூ.100 கோடி வசூலித்தது. இதையடுத்து 26 நாள்களில் ரூ.200 கோடி வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் அந்தப் படம் ரூ.50 கோடி வசூலித்துள்ளது.
Similar News
News April 13, 2025
பெங்களூரு அணி 4-வது வெற்றி.. கோலி புதிய சாதனை!

ராஜஸ்தான் நிர்ணயித்த 174 ரன்கள் இலக்கை எளிதில் எட்டிப் பிடித்து 4-வது வெற்றியை பெங்களூரு அணி பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தானில் ஜெய்ஸ்வால்(75), பராக்(30), துருவ் ஜுரல்(35*) சிறப்பாக விளையாடினர். இதனை அடுத்து களமிறங்கிய பெங்களூரு வீரர்கள் பில் சால்ட்(65), கோலி(62*) அரைசதம் அடித்ததால் அந்த அணி ஈஸியாக வென்றது. டி20 போட்டிகளில் 100 முறை அரைசதம் அடித்து கோலி சாதனை படைத்துள்ளார்.
News April 13, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் விஜய்

வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தலைவர் விஜய் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமானது. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், வக்ஃப் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி விஜய் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார்.
News April 13, 2025
கலவரத்துக்கு நடுவே டீ குடிச்சிட்டு நிற்கும் யூசுப் பதான்!

வக்ஃபு சட்டம் அமலானதை தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் வன்முறை வெடித்துள்ளது. இந்த கலவரத்துக்கு மத்தியில், அப்பகுதியின் TMC MP யூசுப் பதான், இன்ஸ்டாவில் டீ குடிப்பதை போன்ற ஒரு போட்டோவுடன், ‘Relaxing afternoon, good tea and peaceful atmosphere. Just enjoying this moment’ என பதிவிட்டார். இது பெரும் கண்டனங்களை பெற்று, யூசுப் பதானை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.