News March 19, 2024
தமிழகத்தில் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் கூடுதலாக 176 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டில் மொத்த வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 68,320ஆக உயர்ந்துள்ளது. பிரதமர் மோடி பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற காட்சிகள் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News September 8, 2025
உலகின் ஆபத்தான டாப் 10 சாலைகள்

சலிப்பூட்டும் தினசரி வாழ்க்கையில் இருந்து சிறிய பிரேக் எடுத்து உங்களை உற்சாகமூட்டிக் கொள்ள சுற்றுலாவும் தனிப்பட்ட பயணங்களும் உதவும். இதிலும் த்ரில் வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆபத்தான சாலைகளில் பயணம் செய்து கிக் பெறலாம். அதற்கான அழகுடன் ஆபத்துகளையும் ஒளித்து வைத்திருக்கும் டாப் 10 சாலைகளை மேலே போட்டோக்களை வழங்குகிறோம். ஸ்வைப் செய்து கண்டு ரசியுங்கள். SHARE IT
News September 8, 2025
வசூலில் பட்டையை கிளப்பும் ‘மதராஸி’..!

சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோது, வசூலை குவித்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செப்.5-ம் தேதி வெளியான இப்படம், 2 நாள்களில் ₹50 கோடி வசூலை கடந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், 3 நாள்களில் ₹65 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதராஸி படம் உங்களுக்கு பிடிச்சிருந்ததா?
News September 8, 2025
அதிமுகவுடன் நெருக்கம் காட்டும் பிரேமலதா

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக நெருக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, இபிஎஸ் முதுகில் குத்திவிட்டார் என்று நான் சொல்லவே இல்லை என்று பிரேமலதா கூறியதற்கு பின், இருகட்சிகளுக்கும் நட்பு வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில், இபிஎஸ், மக்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படவில்லையே தவிர 4 ஆண்டு காலம் அவர் கையில் கொடுத்த அந்த (CM) பொறுப்பை சிறப்பாக செய்தார் என தெரிவித்துள்ளார்.