News March 19, 2024
திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வாக்குகள் எண்ணும் மையத்தையும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகளையும் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Similar News
News August 13, 2025
கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு சிறப்பு மானியம்

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 132 விவசாயிகளிடமிருந்து 10,712.387 டன் கரும்பு பெறப்பட உள்ளது. அகல பார் அமைத்து பருசீவல் நாற்று, ஒரு பருக்கரணை நடவு உள்ளிட்ட முறைகளுக்கு மாநில அரசு மற்றும் மத்திய திட்டங்கள் மூலம் ஹெக்டருக்கு ரூ.3,000 – ரூ.18,625 வரை மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் அதிக அளவில் கரும்பு நடவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
தி.மலை: B.Sc,,B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <
News August 13, 2025
அதிர்ச்சி: தி.மலை மாவட்டத்தில் 6,925 பேர் பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 20 பேர் நாய் கடித்து ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தி.மலை மாவட்டத்தில் ஜனவரி- ஆக.10 வரை சுமார் 6,925 பேரை தெருநாய்கள் கடித்திருப்பதாகவும், அதில் 3 பேர் உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் தெரு நாய் தொல்லை உள்ளதா? <