News October 31, 2024
நவ.3 பெண்கள் கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு

தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழகம் நடத்தும் ஜூனியர் பெண்கள் ஐம்பதாவது மாநில சாம்பியன்ஷிப் கபடி போட்டி திருவண்ணாமலையில் வருகிற எட்டாம் தேதி துவங்க உள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்ள தூத்துக்குடி மாவட்ட அணிக்கு வீரர்கள் தேர்வு திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வி கல்லூரியில் வைத்து நவ.3ஆம் தேதி நடைபெற உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் தெரிவித்துள்ளது.
Similar News
News September 12, 2025
திருச்செந்தூர் கோவிலை உறுதிமொழி குழுவினர்ஆய்வு

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் குழு உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் (சேலம் மேற்கு), மாங்குடி (காரைக்குடி), எம்.கே.மோகன் (அண்ணா நகர்) ஆகியோர் இன்று 12.9.25 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பாடசாலையை பார்வையிட்டு கள ஆய்வு நடத்தினர்.
News September 12, 2025
தூத்துக்குடி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தூத்துக்குடி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிஞ்சுக்கோங்க. 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000479, 9445000481, 9445000480 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News September 12, 2025
தூத்துக்குடியில் குற்றாவளி ஆஜராக நீதிமன்றம் கெடு

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆபிரகாம் என்பவர் மீது ஒரு வழக்கு விசாரணை உள்ளது. இந்த விசாரணைக்கு அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் தூத்துக்குடி நீதிமன்றம் வரும் 15ம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் அவர் ஆஜராகவில்லை என்றால் அவர் தலைமறைவு குற்றவாளி என தீர்ப்பு விதிக்கப்படும் என நீதிபதி தாண்டவன் எச்சரிக்கை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.


