News March 19, 2024
புதிய படத்தில் விஜய்க்கு ரூ.250 கோடி சம்பளம்?

புதிய திரைப்படத்தில் நடிக்க விஜய்க்கு வரியுடன் சேர்த்து ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடிக்கும் Goat படத்தில் வரியுடன் சேர்த்து ரூ.200 கோடியை அவர் பெற்றதாக கூறப்படுகிறது. இதன்பிறகு, ஹெச்.வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும், அந்தப் படத்துக்கு ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Similar News
News October 23, 2025
அந்த வலியை பாக்., எப்போதும் மறக்காது: ராஜ்நாத் சிங்

தற்போது போர்கள் பல்வேறு புதிய பரிணாமங்களை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அதனால், பாரம்பரிய பாதுகாப்பு நடைமுறைகள் தற்போது வேலைக்கு ஆகாது எனவும், அதனால் தான் முப்படைகளுக்கும் தலைமை தளபதி உள்ளிட்ட பல்வேறு முன் முயற்சிகளை அரசு எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆபரேஷன் சிந்தூர் ஏற்படுத்திய வலியை பாகிஸ்தான் எப்போதும் மறக்காது என்றும் கூறியுள்ளார்.
News October 23, 2025
ராசி பலன்கள் (23.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News October 23, 2025
பெண்களுக்கு மாதம் ₹30,000… அடுத்த அறிவிப்பு

பிஹார் தேர்தல் நெருங்கும் நிலையில் வாக்காளர்களை ஈர்க்க, திட்டங்களையும் வாக்குறுதிகளையும் கட்சிகள் அள்ளி வீசுகின்றன. அண்மையில், ஆளும் JDU-BJP அரசு சுயவேலைவாய்ப்புக்காக பெண்களுக்கு தலா ₹10,000 வழங்கியது. இந்நிலையில், பெண்கள் சுய உதவிக்குழுவினருக்கு மாதம் ₹30,000 சம்பளத்தில் நிரந்தர அரசு வேலை வழங்கப்படும் என்று RJD கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.