News March 19, 2024
சீர்காழி அருகே ரயிலில் அடிபட்டு வாலிபர் படுகாயம்

சீர்காழி ரயில் நிலையத்தில் இன்று காலை திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற செந்தூர் விரைவு ரயில் நின்று கிளம்பியது. அப்போது அடையாளம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயில் நின்று புறப்பட்ட சில நிமிடங்களில் ரயிலின் பக்கவாட்டில் விழுந்து அடிபட்டு தலையில் படுகாயமடைந்தார். ரயில்வே போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News September 15, 2025
மயிலாடுதுறை: பட்டா, சிட்டா விபரங்கள் வேண்டுமா?

மயிலாடுதுறை மக்களே, உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து<
News September 15, 2025
மயிலாடுதுறையில் அன்பு கரங்கள் திட்டம் தொடக்க விழா

மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பெற்றோர் இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2000 வழங்கும் அன்புக்கரங்கள் திட்டம் தொடங்கியது. இதில் ஆட்சியர் ஸ்ரீகாந்த், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார் ஆகியோர் இன்று பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.
News September 15, 2025
மயிலாடுதுறை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

மயிலாடுதுறை மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கே<