News March 19, 2024
வேலூர்: மாட்டு வியாபாரியிடம் பணம் பறிமுதல்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று (மார்ச் 19) அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். மாட்டுச் சந்தையில் மாடுகளை வாங்க வந்த வியாபாரியிடம் உரிய ஆவணம் இல்லாத 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
Similar News
News February 14, 2026
வேலூரில் பைக் வாங்க ரூ.50,000 மானியம்!

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <
News February 14, 2026
வேலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – கலெக்டர் தகவல்!

வேலூர் மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 21-ம் தேதி சனிக்கிழமை வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் நபர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News February 14, 2026
வேலூர்: பெண் குழந்தைக்கு ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


