News October 31, 2024
சென்னை துறைமுக ஆணையத்தில் வேலை
சென்னை துறைமுக ஆணையத்தில் காலியாக உள்ள 16 Executive Engineer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பிஇ., பி.டெக்., எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்சில் இன்ஜினியரிங் முடித்தவர்கள், “செயலாளர், சென்னை துறைமுக ஆணையம், ராஜாஜி சாலை, சென்னை – 600 001” என்ற முகவரிக்கு நவ.25க்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம். கட்டணம் இல்லை. சம்பளம்: Rs.50,000 – 1,60,000 ஆகும். <
Similar News
News November 20, 2024
BMW கார் மோதி ரேபிடோ ஊழியர் பலி
சென்னையில் BMW சொகுசு கார் மோதிய விபத்தில் ரேபிடோ ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரவாயல் – தாம்பரம் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார், டூவீலர் மீது பலமாக மோதியது. இதில், பாண்டி பஜாரைச் சேர்ந்த பிரதீப் குமார் என்ற ரேபிடோ ஊழியர் 100 மீட்டர் தூரம் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். 1 மணி நேர தேடுதலுக்கு பின், புதரில் இருந்து அவரது உடலை போலீசார் மீட்டனர்.
News November 20, 2024
மெட்ரோ ரயில் திட்டத்தில் புதிய அறிவிப்பு
சென்னையில் சுமார் 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100% நிறைவடைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில் ‘கட்டம்-II, வழித்தடம் 4இல், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு நிலையத்திற்கு இடையே உயர்மட்ட வழித்தடத்தில் தூண்கள் அமைக்கும் பணிகளை வெற்றிகரமாக முடித்து அந்நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
News November 20, 2024
இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து!
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இன்று ஒரு நாளில் மட்டும் புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம், சிலிகுரி உள்ளிட்ட 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.