News March 19, 2024

நாளை திமுக வேட்பாளர்கள் பட்டியல்

image

திமுக வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகவுள்ளது. மக்களவைத் தேர்தலில், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கோவை உள்ளிட்ட 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை காலை சென்னையிலுள்ள அக்கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வெளியிடவுள்ளார்.

Similar News

News November 5, 2025

40 நாள்களுக்கு ஒரு போர்க்கப்பல்: கடற்படை தளபதி

image

ஒவ்வொரு 40 நாள்களுக்கும், ஒரு போர்க்கப்பல் அல்லது நீர்மூழ்கி கப்பல், படையில் சேர்க்கப்படுவதாக கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி தெரிவித்துள்ளார். 2035-க்குள் 200-க்கும் மேற்பட்ட போர் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை கடற்படையில் சேர்ப்பதே இலக்கு எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போதைய நிலவரப்படி, கடற்படையில் 142 போர் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 5, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (நவ.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க..

News November 5, 2025

இந்தியா ஒரு சூப்பர்பவர் நாடு: இஸ்ரேல் அமைச்சர்

image

இந்தியா ஒரு சூப்பர்பவர் நாடு என இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் கிடியான் சார் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு, கண்டுபிடிப்பு, தீவிரவாத ஒழிப்பு, வர்த்தகம் என முன்னெப்போதும் இல்லாததை விட இந்தியா – இஸ்ரேல் இடையேயான நட்புறவு வலுப்பெற்று வருவதாகவும், அவர் கூறியுள்ளார். மேலும், ஹமாஸின் கொடூர தாக்குதலின் போது PM மோடி முதல் ஆளாக போன் செய்து ஆறுதல் கூறியதை என்றும் மறக்கமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!