News October 31, 2024
களியக்காவிளை தென்காசிக்கு கேரளா அரசு புதிய பஸ் சர்வீஸ்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையிலிருந்து தென்காசிக்கு கேரளா அரசு போக்குவரத்துக் கழகம் இன்று முதல் பேருந்து சேவையை தொடங்கியுள்ளது. தினசரி காலை 5:30 மணிக்கும் பிற்பகல் 2:40 மணிக்கும் இந்த பஸ் புறப்பட்டு செல்லும். தென்காசியில் இருந்து காலை 10:20 மணிக்கும் இரவு 7:00 மணிக்கும் இந்த பஸ் அங்கிருந்து புறப்பட்டு களியக்காவிளை வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
குமரியில் அடுத்த மாதம் மக்கள் நீதிமன்றம்

குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மாவட்ட மற்றும் வட்ட சட்டப் பணிகள் ஆணை குழு மூலம் அடுத்த மாதம் 13ம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெற இருப்பதாக சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் உதய சூர்யா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். விபத்துகளில் இழப்பீடு சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அதில் கூறியுள்ளார்.
News November 12, 2025
BREAKING நாகர்கோவில்: நாய் கடித்த இளைஞர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்(31). இவர் காவல்கிணறு பகுதியில் கொத்தனார் வேலை செய்து கொண்டிருந்தபோது அவரை நாய் கடித்தது. இதற்கு அவர் சிகிச்சை பெறாமல் இருந்து வந்த நிலையில் அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து ஆசாரிப்பள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனளின்று அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News November 12, 2025
BREAKING குமரிக்கு கனமழை எச்சரிக்கை

வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களி; இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT


